தமிழகம்

நடிக்க வருவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தளபதி விஜையை வைத்து நடத்திய ஷோவ பாத்துருக்கீங்களா?

Summary:

Sivakarthikeyan hosted show of actor vijay video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையாக நம்ம வீட்டு பிள்ளையாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

முழுக்க முழுக்க தனது திறமையாலும், உழைப்பாலும் சினிமாவில் முன்னேறிய நடிகர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அதிலும், பல்வேறு சினிமா பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார். அந்த வகையில் விஜய், அசின் நடிப்பில் உருவான காவலன் படம் வெளியான சமயத்தில் விஜய் - அசின் இருவரையும் வைத்து காவலன் எங்கள் காதலன் என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இன்று தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இவர்களுக்கு அடுத்து பிரபலமான பேசப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் அன்று மிகவும் சாதாரண ஒரு மேடை கலைஞனாக தளபதியை விஜய்யை வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.

 


Advertisement