திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
ஒருதலை காதலிக்கு ஸ்கெட்ச் போட்ட இளைஞன்; கத்தி, கூட்டாளிகளுடன் அதிரடி கைது.. தப்பிய புதுமணஜோடி.!

தான் மட்டுமே காதலித்த பெண்மணி இளைஞருடன் திருமணம் செய்து குடித்தனம் நடத்த, ஒருதலையாக காதலித்த பெண்ணையும், அவரை திருமணம் செய்த நபரையும் கொலை செய்ய புறப்பட்ட நபரை அதிகாரிகள் தட்டிதூக்கிய சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூசையார்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர் (வயது 24). இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை, ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இருவீட்டார் தகராறில் முதியவர் வெட்டிக்கொலை; சிவகங்கையில் பயங்கரம்.!
இதனிடையே, 19 வயது இளம்பெண்ணுக்கு, சமீபத்தில் கரூரில் வசித்து வரும் வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் பெண் மற்றும் அவரின் கணவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிவசங்கருக்கு மேலோங்கி இருக்கிறது.
மூவர் கும்பல் கைது
இதனையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில், கடந்த ஜன.19 ம் தேதி அன்று அறையெடுத்து சிவசங்கர் தங்கி இருக்கிறார். இவருக்கு உடந்தையாக மதுரையை சேர்ந்த ஆனந்த் (வயது 38), திண்டுக்கல்லை சேர்ந்த ஹரிஹரன் (வயது 30) ஆகியோரும் இருந்துள்ளனர்.
இவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருக்கவே, அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில் விடுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிவசங்கரன் அறையில் வெட்டுக்கத்தி, கூர்மையான ஆயுதம் இருந்தது.
முன்னாள் காதலி, அவரின் கணவரை கொலை செய்ய திட்டம்
இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒருதலையாக காதலித்த பெண், அவரின் கணவரை கொலை செய்ய அறையெடுத்து தங்கியது அம்பலமானது. இடநியாயடுத்து சிவசங்கர், ஆனந்த், ஹரிஹரன் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், மூவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: என்னை குற்றவாளி ஆக்கிடாதீங்க.. சிவகங்கை காவல்துறைக்கு கடற்படை வீரர் எச்சரிக்கை.. காரணம் என்ன?