குடும்ப பிரச்சனையில் நடந்த கொடூரம்; வீடுபுகுந்து அரங்கேறிய படுகொலை சம்பவம்.!Sivagangai Man Killed Family Dispute 

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சி, மாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் (வயது 50). இவர் நெய் வியாபாரியாக பணியாற்றி வருகிறார். பி.வேலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்பாண்டி. உறவினர்களாக இவர்கள் இருந்தாலும், இரு குடும்பத்தார் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

வீடுபுகுந்து வெட்டிக்கொலை

இந்நிலையில், வீட்டிலிருந்த வேல்முருகனை வேல்பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: "சஸ்பென்சோட சாவு" - இன்ஸ்டாவில் மரண எச்சரிக்கை; ரௌடி போட்டுத்தள்ளப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி மெசேஜ்.!

குற்றவாளிகள் சரணடைவு

இந்த விஷயம் குறித்து வேல்முருகனின் மனைவி திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று திருப்பாச்சேத்தி காவல்துறையினர் வேல்பாண்டி, சிங்கமுத்து, சிவ பாலமுருகன் மற்றும் சமயத்துறை ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; 57 வயது மதுபோதை ஆசாமி அதிர்ச்சி செயல்.!