அரசியல் தமிழகம் Covid-19

சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி! வீட்டில் தனிமை

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், "தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் உள்ளேன்" என கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மருத்தவ ஆலோசனைப் பெற்று விதிகளை பின்பற்றி நடக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement