மாணவிகள் முன் சீன் போட நினைத்து சில்லறை வாரிய புள்ளிங்கோ.. ஐயோ., அம்மா கதறல்..!

மாணவிகள் முன் சீன் போட நினைத்து சில்லறை வாரிய புள்ளிங்கோ.. ஐயோ., அம்மா கதறல்..!


sivaganga-karaikudi-woman-college-pullingow-atrocity-ac

காசு கொட்டி கிடைப்பதால் சாகசம் செய்தவாறு பொக்கிஷம் தேட நினைத்த இளைஞர் சில்லறை வாரிய நிகழ்வை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி மகளிர் கல்லூரி அருகே மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாகசம் செய்ய செய்ய முயற்சித்தனர். 

அதாவது, ஒரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வாலிபர், தனது இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நிற்க முயல்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட, பின்னால் வந்த வாகனமும் அவரின் மீது மோதி நிற்கிறது.

Sivaganga

இதனையடுத்து, படுகாயத்துடன் ஐயோ அம்மா என்று கதறிய இளைஞரை அவருடன் வந்தவர்களே மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயற்சித்ததாக இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.