அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தாயை தாக்கிய ரௌடியை நரசிம்ம அவதாரமெடுத்து போட்டுத்தள்ளிய பாசமிகு மகன்.. துள்ளத்துடிக்க செத்துப்போன ரௌடி.!
தன்னை ஈன்றெடுத்து வளர்த்த பாசமிகு தாயை ரௌடி தாக்கிய செய்திகேட்டு ஆத்திரமுற்ற மகன், ரௌடியை நரசிம்மன் போல வீட்டு வாசலில் வைத்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கள்ளிவயல் கிராமத்தை சேர்ந்தவன் கணேசன். இவனது பெயரில் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், உள்ளூரில் ரௌடி போல வலம்வந்து இருக்கிறான்.
மதுபோதையில் தன்னை மாவீரனாய் கருதிய மாந்தைசோடு கணேசன், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி சுய இன்பம் அடைந்து வந்துள்ளான். இப்படியாக வறுத்தெடுத்த கேடியாய் இருந்தவன், சம்பவத்தன்று போதையில் 85 வயது மூதாட்டியிடம் தகராறு செய்துள்ளான்.
மேலும், அவரின் வீடுகுபுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறான். இந்த தகவல் மூதாட்டியின் மகன் கண்ணனுக்கு தெரியவர, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கண்ணன் ரௌடி கணேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, தனது தாயை கட்டையால் தாக்கிவிட்டு வாசல்படியில் அமர்ந்திருந்த கணேசனை கண்ணன் அதே கட்டையை வாங்கி நொறுக்கியெடுத்து கொலை செய்தார்.
பின்னர், காரைக்குடி காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற கண்ணன், தனது செயலை கூறி சரணடைந்தார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.