பாம்பு கடித்து 10 வயது சிறுமி பலி.. மருத்துவர் இல்லாத அரசு மருத்துவமனை செவிலியர் சிகிச்சையால் விபரீதம்.!

பாம்பு கடித்து 10 வயது சிறுமி பலி.. மருத்துவர் இல்லாத அரசு மருத்துவமனை செவிலியர் சிகிச்சையால் விபரீதம்.!


sivaganga-karaikudi-10-aged-child-died-nurse-poor-treat

 

நள்ளிரவு நேரத்தில் பாம்பு கடிதத்திற்கு சிகிச்சை பெறச்சென்ற சிறுமி உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சேர்வாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரின் மனைவி அமுதா. தம்பதிகளுக்கு 10 வயதுடைய ஓவியா என்ற மகள் இருக்கிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் வெளியே நள்ளிரவில் உறங்கிக்கொண்டு இருந்தபோது, அவரை எதோ கடித்து பதறியடித்து எழுந்துள்ளார். 

சிறுமி பயத்தில் அலறியதைத்தொடர்ந்து, அமுதா எழுந்து பார்த்துள்ளார். அப்போது, பாம்பு ஊர்ந்து சென்றது மட்டுமே உறுதியாகவே, அவர் மகளை பாம்பு கடித்திருக்கலாம் என காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளார். அங்கு இரவு நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. 

Sivaganga

மருத்துவமனையில் இருந்த செவிலியரும் காயத்தை பார்த்தால் தண்ணீர் பாம்பு போல இருக்கிறது என இரத்தத்தை பரிசோதனைக்காக எடுத்து வைத்துவிட்டு, விஷமுறிவு மருந்து போடாமல் குளுக்கோஸ் மட்டும் சிறுமிக்கு ஏற்றியுள்ளனர். அதன்பின்னர், சிறுமி வாந்தி எடுத்ததால் ஊசி மட்டும் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். 

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று கூறியிருந்தால் வேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தாலாவது குழந்தை உயிரிழக்க வாய்ப்புகள் குறைந்திருக்கும். ஆனால், அலட்சியத்துடன் செவிலியர் அளித்த மருத்துவ சிகிச்சையால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடந்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.