மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
முதல்வர், அமைச்சர், மதங்கள் குறித்து அவதூறு பேச்சு; பாஜக முக்கிய புள்ளி மீது வழக்குப்பதிவு.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில், கடந்த 19ம் தேதியன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கரைக்க செல்லும் நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவும் கலந்துகொண்டார்.
அங்கு எச்.ராஜா பேசும்போது பிற மதங்கள் தொடர்பாகவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மதமோதலை எச். ராஜா தூண்டவதாக காளையார்கோவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குபதியப்பட்டுள்ளது.