மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
விதவை பெண்ணை திருமணம் செய்த தம்பி.! அக்கா செய்த படுபாதக செயல்.! 3 குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் சோக நிலை.!
கணவனை இழந்த, தன்னைவிட 10 வயது அதிகமான பெண்ணை, தம்பி திருமணம் செய்ததை விரும்பாத அக்கா, கூலிப்படையை ஏவி தம்பியின் மனைவியை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக உள்ள ராமச்சந்திரன் (28) என்பவருடன் காளியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இது ராமச்சந்திரனுக்கு முதல் திருமணம் ஆகும். மேலும் காளியம்மாளின் குழந்தைகளை ராமச்சந்திரன் பராமரித்து வருகிறார். இவர்கள் திருமணத்திற்கு ராமச்சந்திரன் குடும்பத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் நேற்று காளியம்மாவின் சடலம் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டின் முன்பு கண்டெடுக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் காளியம்மாள் மற்றும் ராமச்சந்திரனின் திருமணத்தை விரும்பாத ராமச்சந்திரனின் அக்கா விஜயலட்சுமி, தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையின் உதவியுடன் காளியம்மாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலைகான முன் பணம் ஆக ரூபாய் 70 ஆயிரம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
ராமச்சந்திரனின் தந்தை பெரும் பணக்காரர் என்பதால், அந்த சொத்து காளியம்மாளுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் இக்கொலையை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஜெயபால், கவிதா, விஜயலட்சுமி, விவேக் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காளியம்மாவின் மரணத்தினால் அவரின் மூன்று குழந்தைகளும் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.