அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அண்ணி கண்டித்ததால் 28 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு...கதறும் குடும்பத்தினர்.!
சிப்காட் அருகே அண்ணி திட்டியதால் மனமுடைந்த 28 வயது வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 28 வயதான இவர் வேலைக்கு சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் சதிஷின் அண்ணி சதிஷிடம் ஏன் ஒழுக்காக வேலை போகவில்லை என்று கேட்டு கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சதிஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் சதிஷின் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.