இருக்க இடம்கொடுத்தால் சேட்டை கிழித்து சீட்டை செய்யும் நாய்கள்.. நொந்துபோன ஆட்டோ ஓட்டுநர் தடாலடி முடிவு.!

இருக்க இடம்கொடுத்தால் சேட்டை கிழித்து சீட்டை செய்யும் நாய்கள்.. நொந்துபோன ஆட்டோ ஓட்டுநர் தடாலடி முடிவு.!


SIngaperumakovil Dogs Atrocity Auto

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி கிராமம் குப்பைக்காரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

பகல் வேளைகளில் ஆட்டோவை ஓட்டும் சரவணன், இரவில் அதனை வீட்டிற்கு அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். இவரின் ஆட்டோவை தங்களுக்கு அடைக்கலமாக பயன்படுத்திக்கொள்ளும் 5 நாய்கள், ஆட்டோவில் இரவில் உறங்கி வந்துள்ளன.

மேலும், அவைகளுக்கு பல் கூச்சமாக இருப்பதால், அதனை போக்க ஆட்டோ இருக்கையை கடித்து குத்தறிவிடுகிறது. உறங்கினால் உறங்கிவிட்டுப்போகட்டும் என்று விட்ட சரவணனுக்கு நாய்களின் போக்கு இரத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, நாய்களின் தொல்லையை தடுக்க யோசித்த சரவணன், ஆட்டோவின் இருபுறமும் மரத்தினால் சட்டம் தயார் செய்து நாய்கள் ஆட்டோவின் உட்புறம் செல்லாதவாறு அடைத்து வைத்துள்ளார். 

நாய்கள் இவர்களின் தெருவில் அதிகளவில் வசித்து வருவதால், அதனை அதிகாரிகள் கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.