சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் உண்மைக்கதை.

சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் உண்மைக்கதை.



singampatti samasthanam - thirunelvali

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தின்  அருகில் அமைந்துள்ள சிறப்புமிக்க சமஸ்தானம் சிங்கம்பட்டி.  இது சேர,  சோழ,  பாண்டியர்களுக்கு இணையான  பெருமை இதற்கு உண்டு. பாண்டியர்களின் வம்சத்தின்  கீழ் வரும் குறுநில மன்னர்களாகிய சிங்கம்பட்டி ஜமீன்தார்களுக்கும்  பல பெருமைகள்  உண்டு.  'சீமராஜா' படத்தில் ஒரு சில விஷயங்கள் தெரிவித்திருந்தாலும் சிங்கம்பட்டியின்  உண்மை நிலை வேறு.

அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது சிங்கம்பட்டி பகுதி.

1952இல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இதற்கு முன்பு 74 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. தற்போது அந்த நிலங்கள்  சுற்றுலா தலமாக போற்றப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை  இது ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தற்போது ஜமீன்தார் வாரிசுகள் அங்கு குடி இருக்கிறார்கள்