சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது! சிபிசிஐடி அதிரடி!si arrest for sathankulam issue

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்தவிவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ள காரணத்தால் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ தொடங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இந்த வழக்கு விசாரணையை இன்றுதான் சிபிசிஐடி தொடங்கியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சிபிசிஐடி ஐ.ஜி, மாவட்ட காவல் ஆண்காணிப்பாளர் ஆய்வு தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி தெரிவித்துள்ளார்.

sathankulam

இந்தநிலையில், இந்த வழக்கில் முக்கியமாக குற்றச்சாட்டப்பட்ட எஸ்.ஐ ரகுகணேஷை சி.பி.சி.ஐ.டி காவல்துறை கைது செய்துள்ளது. ஊரடங்கை மீறியதாக கைதான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடல்நலக்குறைவால் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் கூறிய நிலையில், அவர்களை சித்ரவதை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.