"பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு... " பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து.!! தலைமை காவலர் கைது.!!



shocking-incident-head-constable-arrested-for-stabbing

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி மாட விதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(22). இவரது சித்தப்பா மகன் அர்ஜுன்(16). இந்த சிறுவன் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிவனேசன்(40).காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்காக ஆழ்வார் திருநகரி பேருந்து நிலையத்தில் சிவனேசன் நின்றிருந்தார். அப்போது செந்தில், ஆறுமுகம் அந்த வழியாக வேகமாக சென்றுள்ளனர்.

இதனைக் கண்டு கோபமடைந்த சிவனேசன், பள்ளி குழந்தைகள் செல்லும் இடத்தில் இவ்வளவு வேகமாக செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில்  சிறுவன் அர்ஜுன் மீது  கத்திக்குத்து விழுந்தது. இந்த தாக்குதலில் அர்ஜுன் வயிற்றில் கத்தி உடைந்து சிக்கியுள்ளது. வலி தாங்க முடியாத சிறுவனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு கத்தி வெளியே எடுக்கப்பட்டது.

tamilnadu

இந்த சம்பவம் குறித்து ஆழ்வார் திருநகரி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமை காவலரை அழைத்து விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சிவனேசன் கையிலிருந்த பைக் சாவியில் இணைக்கப்பட்ட பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜுன் குத்தபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை காவலர் சிவனேசனை கைது செய்து விசாரணை நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: "காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம்..." 15 வயது மாணவன் கொலை.!! சிறுவன் கைது.!!

இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!