அதிர்ச்சி.. அறிவுரை கூறிய கல்லூரி பேராசிரியர்.. அடித்து நொறுக்கிய மாணவன்..!Shocked.. The college professor who gave advice.. The student who was beaten..!

மதுரை கே.புதூர் சங்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹுசைன் சையது இப்ராஹீம். இவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் பணிபுரியும் ஒருவரிடம் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தகராறு செய்தது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார்.

இதனைக் கண்ட ஹுசைன் சையது இப்ராஹிம் அந்த மாணவரை தனியாக அழைத்து கண்டித்துள்ளார். மேலும் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கூறி அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்  பேராசிரியர் ஹுசைனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

student

மேலும் இது பற்றி கல்லூரி முதல்வரிடம் மாணவர் தகராறு செய்துள்ளார். பின்னர் அவ்வழியாக சென்ற பேராசிரியர் ஹூசைன் சையது இப்ராஹீமை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.