இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
ச்ச்ச.... மனுஷனா நீ... நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கச் சொல்லி வீடியோ எடுத்த கொடூரம்... பள்ளி ஆசிரியை பரபரப்பு குற்றச்சாட்டு.!

சென்னையில் நடைபெற்ற காவல்துறையின் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் தனது கணவர் அவரது நண்பர்களுடன் தன்னை தனிமையில் இருக்க சொல்லி கொடுமைப்படுத்தியதாக புகாரளித்த விஷயம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை பெரியமேடு சிங்கார தெருவை சேர்ந்த ஒரு ஆசிரியரின் மனைவி ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் தனது கணவர் கடந்த ஓராண்டாக பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தி வருவதாக காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்தார். தனது கணவர் அவருடைய நண்பர்களுடன் தன்னை தனிமையில் இருக்க கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னைத் தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவரது நண்பர்களை விட்டு தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அதை கணவரே வீடியோ பதிவும் செய்ததாகவும் அதிர்ச்சி அடைக்கும் தகவல்களை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பிரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தன்னுடைய கணவரை அவர்கள் கைது செய்யவில்லை என்று தெரிவித்த அந்த பெண் விவாகரத்து செய்யவர் பொருத்தவராகவே தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகவே கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆணையர் தலைமையில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தார். அதே கூட்டத்திற்கு வந்திருந்து அவரது கணவருக்கும் இந்தப் பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. காவல்துறையினர் இருவரையும் தனி அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.