ஷாக்.. வங்கியில் பணம் எடுக்கும் முதியவர்களை குறி வைத்து நடத்தப்படும் தொடர் கொள்ளை சம்பவம்.. அதிரடி காட்டிய போலீஸ்..!

ஷாக்.. வங்கியில் பணம் எடுக்கும் முதியவர்களை குறி வைத்து நடத்தப்படும் தொடர் கொள்ளை சம்பவம்.. அதிரடி காட்டிய போலீஸ்..!



Shock.. A series of robberies targeting elderly people taking money from the bank.. The police showed action..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் தனது அவசர தேவைக்காக வங்கியில் நகைகளை அடகு வைக்க சென்றுள்ளார். அப்போது அவர் நகைகளை அடகு வைத்து 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் தொகையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் 2 பேர் மூதாட்டியிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் பெரம்பலூரை சேர்ந்த நந்தா என்ற பழனிச்சாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

robbery

மேலும் அவர்களிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தையும், கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய புது செல்போனையும் கைப்பற்றினர். அத்தோடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட பயன்படுத்திய டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் திருச்சி மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.