தமிழகம்

மனைவியின் செல்போனுக்கு தொடர்ந்து 10 நாட்களாக வந்த பாலியல் தொடர்பான குறுஞ்செய்தி! அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்!

Summary:

sexual message in wife mobile


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் துணிக்கடை ஒன்றை அமைத்து அதனை அவரது மனைவியை நடத்தைவைத்துள்ளார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு துணிக்கடையில் ராம்பிரபு என்பவர் துணி வாங்க வந்துள்ளார். துணிக்கடையில் ராம்பிரபு, சுப்ரமணியின் மனைவியிடம் துணி வாங்குவது போன்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசியுள்ளார். மேலும் கடையின் பெயர் பலகையில் உள்ள அவரின் செல்போன் எண்ணையும் பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து சுப்ரமணியின் மனைவியின் செல்போன் எண்ணிற்கு ராம்பிரபு குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று தொடர்ந்து 10 நாட்களாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரது கணவர் சுப்பிரமணியனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

wife chatting mobile க்கான பட முடிவு

தனது மனைவியின் செல்போனுக்கு வந்த மெசேஜ்களை பார்த்த சுப்ரமணியன் அதிர்ந்து போய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ராம்பிரபுவை பிடிக்க திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். இதனையடுத்து ராம்பிரபுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட சுப்பிரமணியன், பெண் குரலில் ஆசையாக பேசி, கடைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனால் ஆசையுடன் சுப்பிரமணியனின் மனைவியை பார்க்க துணிக்கடைக்குச் சென்றுள்ளார் ராம்பிரபு. அப்போது கடைக்கு வந்த ராம்பிரபுவை சுப்பிரமணியன் பிடித்து பொதுமக்கள் உதவியுடன் ராம்பிரபுவை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியான அடித்து, பின்னர்  காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

 


Advertisement