கொரோனாவை விட கொடூரம்.! முன்கள பணியாளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!

கொரோனாவை விட கொடூரம்.! முன்கள பணியாளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!


sexual-harassment-of-a-female-employee-who-went-to-chec

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனாவால் உயிரிழப்பு 300-ஐ கடந்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரு லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்ய  களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்தநிலையில், சென்னை ஏழுகிணறு பகுதியில் மாநகராட்சி முன்கள பணியாளராக 27 வயதான இளம் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது போர்ச்சுகீசு சர்ச் தெருவில் ஒரு குடியிருப்பில் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சதக்கத்துல்லா என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

harassment

அப்போது சதக்கத்துல்லாவிடம் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என அந்த இளம்பெண் கேட்டுள்ளார். தனது மனைவிக்கு காய்ச்சல் இருப்பதாகவும் வீட்டிற்குள் வந்து உடல் வெப்ப நிலையை பரிசோதிக்குமாறும் சதக்கதுல்லா அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்தில் சதக்கதுல்லா கதவை தாழிட்டு அப்பெண்ணிடம் தவறுதலாக நடக்க முயற்சித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிர்ச்சியடைந்த இளம் பெண் அலறல் சத்தம் போட்டு வெளியில் ஓடி வந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சதக்கத்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.