BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
'16 வயதுக்கு மேலானவர்கள் விருப்ப உறவு கொண்டால் குற்றமாகாது' தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை.!
நாட்டில் இன்றைய சூழலில் பெருகி வரும் தொழில்நுட்பங்களின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் சொகுசு வாழ்க்கையும் அதிகரித்துள்ளது. அதே அளவிற்கு பாலியல் தொல்லைகளும் தலைவிரித்தாடுகிறது. அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியர் அதிக அளவில் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.
இதில் குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றம் இழைத்தவர்கள் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப் படுகின்றன. இருந்தாலும் இந்த மாதிரியான குற்றங்கள் குறைந்தபாடில்லை இந்நிலையில், நாமக்கல்லை சேர்ந்த சபரிநாதன் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த மனுவில், பெருகி வரும் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு நடைமுறையில் இருக்கும் பாலியல் உறவு கொள்ளும் வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் குற்றமாகாது என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.