கடும் நெஞ்சுவலி.. உயிர் போகும் கடைசி நேரத்திலும் பயணிகளை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.!

கடும் நெஞ்சுவலி.. உயிர் போகும் கடைசி நேரத்திலும் பயணிகளை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்.!



Severe chest pain.. Government bus driver who saved the passengers at the last moment of dying..!

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நல்லூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாரிமுத்து சம்பவத்தன்று வழக்கம் போல் விருத்தாசலத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்தில் சுமார் 18 பயணிகள் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த பேருந்து திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாரிமுத்துவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

Chest pain

அப்போது மாரிமுத்து பதட்டப்படாமல் பயணிகளின் நலன் கருதி பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த பேருந்தின் நடத்துநர் நேருவிடம் மாரிமுத்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடத்துநர் மாரிமுத்துவை மீட்டு பயணிகளின் உதவியோடு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.