"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
பவர் கட்: சென்னையில் நாளை ஏழு மணி நேரம் மின்வெட்டு! மக்களே உஷார்!
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் சில இடங்களில் நாளை (25.9.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின் உற்பத்தி பராமரிப்பு காரணமாக காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை அதாவது ஏழு மணி நேரம் மின் விநியோகம் கீழ் கண்ட பகுதிகளில் தடைபடும் என தமிழ்நாடு முன் உற்பத்தி வாரியம் தெரிவித்துள்ளது.
பல்லாவரம் பகுதி: கோல்டன் அவென்யூ, கலைவாணி நகர், திருவீதியம்மன் கோயில் தெரு, சுபம் நகர், அம்மன் நகர், காந்தி காலனி, முருகேசபுரம், ஆஞ்சேய நகர், தாரா நகர், யூனியன் கார்டன் காலனி, கன்டோன்மென்ட் பல்லாவரம், பம்மல்மெயின் சாலை, பழைய டிரங்க் ரோடு, கிருஷ்ணா நகர், மூங்கில் ஏரி, 200 அடி ரோடு ஒரு பகுதி, காகிதபுரம், சுண்ணாம்பு கொளத்தூர், மணிமேகலை நகர், ஜட்ஜ் காலனி, இன்ஜினியர் அவென்யூ, பாக்யலட்சுமி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர்.
கோவூர் பகுதி: கோவூர், தண்டலம் பெரியபணிச்சேரி, குன்றத்தூர், சிக்கராயபுரம்.