பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும்! எப்போது நடைபெறும்? அமைச்சர் செங்கோட்டையன்.

Sengotyayan talk about sslc


sengotyayan-talk-about-sslc

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட்டாயம் நடைபெறும். ஊரடங்கு முடிவடைந்த பின்னா் அந்தத் தோ்வுக்கான அட்டவணை வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Sslc

அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் தான் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அந்த தேர்வு கண்டிப்பாக நடக்கும். இதைத்தான் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஊரடங்கு முடிந்ததும்,
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு பொதுத்தேர்வு எப்படி நடத்தலாம்? என்பதை முதலமைச்சரின் கவனத்துக்கு கல்வித்துறை மூலம் எடுத்து செல்லவுள்ளோம். அதன்பிறகு தேதிகள் அறிவிக்கப்படும். ஊரடங்குக்கு பிறகுதான் தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.