கட்டாய முகக்கவசம்! மீறினால் அபராதம்! சேலம் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

கட்டாய முகக்கவசம்! மீறினால் அபராதம்! சேலம் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!


selam-collector-announced-about-wearing-mask

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இவ்வாறு இந்தியாவில் இதுவரை 11439 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 337 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

mask

இந்நிலையில் ஊரடங்கில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் சமூகவிலகலை பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து  அறிவுறுத்தபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலம்  மாநகரில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அதாவது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என சேலம் மாநகராட்சி அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு  ரூ500 அபராதம் விதிக்கப்படும் எனவும்  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.