குமரியில் பரபரப்பு..கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது.!

குமரியில் பரபரப்பு..கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது.!


Seizure in Kumari..Physical teacher arrested for sexually harassing college student.!

 

கன்னியாகுமரி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த ஜெனிகர் பிரபு என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் ஜெனிகர் பிரபு அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மாணவி பல முறை அந்த உடற்கல்வி ஆசிரியரை கண்டித்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெனிகர் பிரபு மீது புகார் அளித்துள்ளார்.

Sexual Harrasment

அதன் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியரான ஜெனிகர் பிரபுவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜெனிகர் பிரபு மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்தது உண்மை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஜெனிகர் பிரபு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் கல்லூரி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.