அரசியல் தமிழகம்

ரஜினி அரசியலுக்கு வரலாமா? வேணாமா? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பேச்சு.!

Summary:

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், தற்போதுள்ள அரசியல் சூழல் மிக மோசமான ஆட்டமாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும்,ஓய்வு தேவை என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றும், அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட தான் மூத்தவர். அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாக பேசுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட நடிகர் ரஜினிகாந்த் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் மாற்றம் ஏற்படாது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.


Advertisement