கன மழையால் பாதிப்பு: இந்த பகுதிகளில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..! வெளியான அறிவிப்பு..!schools-are-closed-today-only-in-these-areas-affected-b

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை பெய்த காரணத்தினால், பள்ளிகளில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.