வீடியோ: அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்!! வைரல் வீடியோ..



School teachers fight viral video

அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரும், மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரும் கட்டிப்புரண்டு தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலப்பள்ளியில்தான் நடந்துள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருபவர் அண்ணாமலை. இவருக்கும், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நிகழும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற, தலைமை ஆசிரியரும், ஆசிரியர் செழியனும் பள்ளியிலேயே சக ஆசிரியர்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்துக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.

இருவரும் சண்டை போடுவதை பார்த்த சக ஆசிரியர்கள், இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களை சமாதானம் செய்து சண்டையை முடித்து வைத்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருக்கிறார்.