பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்.! மாணவிகளின் துணிச்சல் செயலால் தலைமறைவான ஆசிரியர்.!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்.! மாணவிகளின் துணிச்சல் செயலால் தலைமறைவான ஆசிரியர்.!


school teacher sexual torture to students

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருவரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் ஆரோக்கியதாமஸ். இவர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்ததையறிந்த ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து ஆசிரியர் ஆரோக்கியதாமஸை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் ஆசிரியர் ஆரோக்கியதாமஸ் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதாகவும், அதனடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.