தமிழகம் காதல் – உறவுகள்

22 வயது இளம் கல்லூரி மாணவி..! 17 வயது பள்ளி மாணவன்..! திருமணம் செய்து குடும்பம் நடத்திய சம்பவம்..! விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

கல்லூரி மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பள்ளி மாணவன்!. விசாரணையில் உறைந்துபோன காவல்துறையினர்!.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர், தனது மகளை கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடத்தி திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரின் பேரில் இளம்பெண்ணை மீட்க சென்ற காவல்துறையினர் அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போலீசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

ராஜாராம் எனபவரால் புகார் கூறப்பட்ட அந்த நபர் 17 வயது பள்ளி மாணவன் என்பதும், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த இளம்பெண் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த 31ஆம் தேதி அன்றே திருமணம் செய்து, குடும்பம் நடத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், நடந்த நீதிமன்ற விசாரணையில் 17 வயது சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதாலும், இளம்பெண்ணுடன் சிறுவன் பாலியல் உறவு கொண்டதாலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement