பள்ளி திறந்த இரண்டே நாளில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

பள்ளி திறந்த இரண்டே நாளில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!



school student affected by corona

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. 
 
தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பையொட்டி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, பள்ளி வளாகங்களில் முழுமையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இந்நிலையில், பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.