தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?.! மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?.! மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!


school-reopening-date-accouncing

தமிழ்நாட்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் எப்போது பள்ளிகள் தொடங்கப்படும்? என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில், அடுத்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ம் தேதியும், 20ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 27ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.schoolபள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா, தக்காளி காய்ச்சல், குரங்கம்மை போன்ற பல காய்ச்சல்கள் பரவி வருகிறது.

இதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் பள்ளிகளுக்கு வரும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.