தமிழகம்

#வீடியோ: பொது இடத்தில் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் பள்ளி மாணவிகள்.. வைரலாகும் வீடியோ..!

Summary:

#வீடியோ: பொது இடத்தில் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் பள்ளி மாணவிகள்.. வைரலாகும் வீடியோ..!

பொது இடத்தில் பள்ளி மாணவிகள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட சம்பவமானது சென்னை ஆவடி அருகே நடந்துள்ளது. ஆவடியில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் சிலர் அங்கிருந்த பேருந்து நிலையம் ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, மாணவிகள் சிலர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

பொது இடத்தில் மாணவிகள் சண்டையிடுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பிரித்துவிட எவ்வளவோ முயற்சி செய்தும் மாணவிகள் சண்டை போடுவதை நிறுத்தவில்லை. மாணவிகளுக்கு இடையே நடந்த சண்டை குறித்த காரணம் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மாணவிகள் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement