"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
வீடியோ: பார்க்கும்போதே மனசு பதறுது!! ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவி செய்த காரியம்.. வைரல் வீடியோ..
வீடியோ: பார்க்கும்போதே மனசு பதறுது!! ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவி செய்த காரியம்.. வைரல் வீடியோ..

ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறிப்பிட்ட வீடியோ பதிவில் மாணவி ஒருவர் மாணவன் ஒருவருடன் சேர்ந்து மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி செல்கிறார். முதலில் இருவரும் ரயிலை பிடித்தபடி வேகமாக ஓடிவருகின்றனர். பின்னர் அந்த மாணவி ரயிலில் ஏறியதும் படிக்கட்டில் நின்றுகொண்டு தனது கால்களை வெளியே நீட்டி, பிளாட்பாரத்தை தனது கால்கள் தேய்த்தபடியே பயணம் செய்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த மாணவனும் அதேபோல் தனது கால்களை வெளியே நீட்டி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட சம்பவமானது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
திருவள்ளூர் கவரப்பேட்டையில் மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவி விபரீதமாக பயணம் செய்யும் காட்சி பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது@Anbil_Mahesh @GMSRailway @RPF_INDIA pic.twitter.com/OxcEy2Ub0k
— Vijay (@vijay_journo) November 25, 2021