தமிழகம்

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி பலி! தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Summary:

school girl died for dengue


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவரின் 4 வயது மகள் நட்சத்திரா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் குறையாமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன் தினம் நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமி நட்சத்திரா படித்த தனியார் பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில், டெங்கு கொசு உற்பத்தி ஆகும் நிலையில் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவை கிடந்துள்ளது.

இந்தநிலையில் டெங்குக் கொசுக்கள் உருவாகும் ஆரம்ப நிலை அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தப் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இனி இது போன்று கண்டறியப்பட்டால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Advertisement