விடுதியில் இருந்த மாணவி ரயிலில் அடிபட்டு மர்ம மரணம்! துடிதுடித்துப் போன பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு!



school-girl-dead-in-train-attack

அரியலூர் மாவட்டம் அயன்சுத்தமல்லி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மகள் ரேகா. 16 வயது நிறைந்த அவர் வடுகர்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, 11 ஆம் வகுப்பு  படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ரேகாவை காணவில்லை என பள்ளி நிர்வாகம் ரேகாவின் குடும்பத்தாருக்கு தகவல் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து வடுகர்பேட்டைக்கு விரைந்த அவர்கள் அங்கு பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை 

இந்நிலையில் ரேகா வடுகர்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாகவும் , அவரது சீருடை மற்றும் ஐடி கார்டை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடித்ததாகவும் போலீசார்கள்  ரேகாவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரேகாவின் குடும்பத்தினர் மகளை  கண்டு கதறி அழுதுள்ளனர். அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

dead

இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்று சிலநாட்கள் ஆன நிலையில் நேற்று ரேகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தங்களது மகள் ரேகா எப்படி விடுதியில் இருந்து வெளியேறினார். அவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து பள்ளி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ரேகாவின் மரணம்  தொடர்பாக இன்னும் 10 நாட்களில் விசாரணை மேற்கொண்டு  உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.