நெஞ்சை உருக்கும் சம்பவம்.. பெத்த மகளை இழந்து கதறி துடித்த பெற்றோர்.!! குளத்தில் குளித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு..School girl dead after dumbed in water near Tirunelveli

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கலைச்செல்வன்  - கலைச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் ஆண்ட்ரியா(13) அருகில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் ஆண்ட்ரியாவும், வேறுசில சிறுவர் சிறுமிகளும் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சிறுவர்கள் அனைவரும் கரையேறிய பிறகும் ஆண்ட்ரியா மட்டும் தனியாக குளத்தில் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி ஆண்ட்ரியா திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறுமி தண்ணீரில் மூழ்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குளத்தில் இறங்கி சிறுமியை தேடியுள்ளனர். ஆனால் நீண்ட தேடுதலுக்கு பிறகு சிறுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தங்கள் மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.