தமிழகம்

அசத்தும் தமிழகம்! மாணவர்களுக்கு முழுமையான கல்வி; இந்தியாவிலேயே முதலிடம்.!

Summary:

school education - india's no.1 tamilnadu

இந்தியாவில் நடைமுறையில் உள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைகின்றனர். ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பை தேர்வு பயம், தேர்வில் தோல்வி, மாணவர்களின் தவறான பழக்கவழக்கங்கள், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.

இவ்வாறான மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து அவர்களுக்கு முழுமையான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை U.D.I.S.E -ன் ஆய்வின்படி, தமிழகத்தில் 86.2% பேர் பள்ளிப்படிப்பை முழுமை செய்கின்றனர். இதற்கு அடுத்ததாக இரண்டாம் இடமாக ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 85.8% பேர் பள்ளிபடிப்பை நிறைவு செய்கின்றனர். மூன்றாம் இடத்தில் (85.6%) கேரளா, மாரட்டிய மாநிலம் உள்ளது. 

சமுதாய வகுப்பு வாரியாக பார்க்கும் போது, எஸ்.சி – 65%, எஸ்.டி. – 61%, ஓ.பி.சி – 73%, பொது – 74% என்ற அளவில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றனர். ஆண், பெண் விகிதாச்சார அடிப்படையில் இருவருமே சமமாக 70% முழுமையாக பள்ளிப்படிப்பை முடிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement