புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்.! பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்.! பகீர் சம்பவம்!!
மதுரை மீனாம்பாள்புரம் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விக்னேஸ்வர். 17 வயது நிறைந்த இவர் கடந்த ஞாயிற்று கிழமை தனது நண்பர்களுடன் கூடல்நகர் ரயில் நிலையம் பகுதிக்கு விளையாட சென்றுள்ளார். மேலும் அனைவரும் ரயிலில் இருந்து செல்பி எடுத்துள்ளனர்.
அப்பொழுது விக்னேஷ்வர் ரயில் நிலைய ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் விக்னேஷ்வர் கை பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். அதனை கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்பு அங்கு விரைந்த போலிஸார் விக்னேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செல்பி மோகத்தால் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.