தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இல்லை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Summary:

saturday and sunday school working day


பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு நிலையில், தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

teacher joined schhol after jacto geo strike க்கான பட முடிவு

மேலும் போராட்டத்தை தொடர்பவர்கள்  பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கை பிறப்பித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை நிறுத்தி பணிக்கு திரும்பினார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக மாணவர்களின் 8 நாள் வகுப்புகள் தடைபட்டது.

இந்நிலையில், இதனை சமன்செய்யும் வகையில், வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Advertisement