அடேங்கப்பா.. பறை இசைக்கு பேரறிவாளனுடன் வேற லெவல் குத்தாட்டம் போட்ட நடிகர் சத்யராஜ்.! இணையத்தை கலக்கும் வீடியோ.!

அடேங்கப்பா.. பறை இசைக்கு பேரறிவாளனுடன் வேற லெவல் குத்தாட்டம் போட்ட நடிகர் சத்யராஜ்.! இணையத்தை கலக்கும் வீடியோ.!


sathyaraj-dance-with-perarivaalan-video-viral

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர் பேரறிவாளன். அவர் பல போராட்டங்களுக்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து சில காலங்களுக்கு முன்பு விடுதலையானார். இந்நிலையில் அவரது விடுதலைக்காக போராடிய அவரது தாய் மற்றும் பல அமைப்பினரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் தனது தந்தை குயிலின் 80வது பிறந்தநாள் மற்றும் தாயார் அற்புதம்மாளின் 75வது பிறந்த நாளை ஒன்றாக திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதில், பல அரசியல் பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த விழாவை மேலும் சிறப்பிக்கும்வகையில் அலங்காநல்லூர் சமர் பறை இசைக் குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது அவர்களின் பறை இசைக்கு பேரறிவாளன் ஆட்டம் போட்டுள்ளார். பின் மேடை ஏறிய நடிகர் சத்யராஜ்ஜூம் அவருடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.