தமிழகம்

பொதுமக்கள் அஞ்சலிக்காக, போலீசார் தாக்கியதில் உயிரிழந்த தந்தை-மகன் உடல்!

Summary:

sathankulam fathar and son tribute

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த 2 வணிகர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு முன்பு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவர்களது உடலுக்கு திமுக எம்பி கனிமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

உயிரிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவதற்காக சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கூடினர். மேலும் அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு எதிராக போராட்டக்கள கோஷங்களை எழுப்பினர்.


Advertisement