தமிழகம்

சாத்தான்குளம் விவகாரம்! தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

Summary:

sathankulam case handover to cbi

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

விசாரணையின்போது அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் சர்வதேச கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்ற அனுமதி பெற்று தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.


Advertisement