எம்.ஜி.ஆரே என்னிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.! முதன்முறையாக சசிகலா வெளியிட்ட தகவல்.!sasikala-talk-about-mgr

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொந்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. 

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை கிளப்பி வருகிறது. தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலா, தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் பேசிய போது, எம்.ஜி.ஆருடன் பயணித்த காலத்தில் அவருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

sasikalaஅவர் பேசிய ஆடியோவில், எம்ஜிஆர் உடன் இணைந்து பயணித்திருக்கிறேன். பலருக்கும் வெளியே தெரியாது. கட்சி தொடர்பான கருத்துக்களை எம்ஜிஆர் என்னிடம் கேட்பார், பொறுமையாக எடுத்துச் சொல்வேன். ஜெயலலிதா கோபமாக முடிவு எடுக்கும்போது, பொறுமையாக பேசுவேன். தொண்டர்களுக்காக நீங்கள் இருக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன் என சசிகலா பேசியுள்ளார்.