அரசியல் தமிழகம்

சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு.! கடுமையான நுரையீரல் தொற்று! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை.!

Summary:

சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு, நுரையீரல் தொற்றும் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். இந்தநிலையில், சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தநிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. 

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவமனை சற்றுமுன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட விக்டோரியா அரசு மருத்துவமனை, ''சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளது.


Advertisement