கந்துவட்டி கொடுமையால் கணவன் - மனைவி தற்கொலை.. சேலத்தில் சோகம்: அராஜக கும்பலுக்கு காப்பு போட்ட காவல்துறை.!

கந்துவட்டி கொடுமையால் கணவன் - மனைவி தற்கொலை.. சேலத்தில் சோகம்: அராஜக கும்பலுக்கு காப்பு போட்ட காவல்துறை.!


Salem Usury Interest Loan Torture Husband Wife Died

 

ரூ.4 இலட்சம் கடனுக்கு அசலுக்கு 2 மடங்கு கூடுதலாக பணம் செலுத்தியும் கடன் தீரவில்லை என்று கூறிய கந்துவட்டி கும்பலால் கணவர் தற்கொலை செய்ய, மனமுடைந்த மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கில் சடலமாக தொங்கிய சோகம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை, எஸ். கொல்லப்பட்டு ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). இவரின் மனைவி விஜயா (வயது 58). தம்பதிகளுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். தங்கராஜ் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த நிலையில், வீட்டு வேலைக்காக ரூ.2 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார். 

பணத்தை கட்ட இயலாததால் கடன் கொடுத்தவர்கள் வட்டிக்குவட்டி போட்டு பணம் கேட்டு நெருக்கடி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன தங்கராஜ், தற்கொலை செய்துகொள்ள எண்ணி எலி மருந்து வாங்கி சாப்பிட்டு பூனைக்காடு பகுதியில் மயங்கி இருந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குடும்பத்தினர், தங்கராஜை மீட்டு அஸ்தம்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்க இயலாது தவித்த விஜயாவும் மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

Salem

தற்கொலை விவகாரம் தொடர்பாக தங்கராஜின் மகன் கோபி, அங்குள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, ரெட்டியூரை சேர்ந்த ராஜா (வயது 46), சாவித்ரி (வயது 45) ஆகியோரிடம் கடந்த 2018ல் தங்கராஜ் ரூ.4 இலட்சம் கடன் வாங்கியுள்ளார்.

ரூ.4 இலட்சம் கடனுக்கு 2 மடங்குக்கு மேல் பணம் கொடுத்ததும் தீராது, தங்கராஜுக்கு கூடுதல் வட்டி என பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என கோபி தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ராஜா, சாவித்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.