பப்ஸ் வாங்கி சாப்பிட்ட 29 பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்.. சேலம் தனியார் பள்ளியில் பகீர்.!

பப்ஸ் வாங்கி சாப்பிட்ட 29 பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்.. சேலம் தனியார் பள்ளியில் பகீர்.!


Salem Private School Snacks Eating Students Food Poison

 

பள்ளி வளாகத்தில் இருக்கும் கேன்டீனில் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கமலாபுரத்தில் ஜான் பிரிட்டோ தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். 

பள்ளி வளாகத்திலேயே கேன்டீனும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கேன்டீனில் உணவு இடைவேளை நேரத்தில் 6 & 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர். 

Salem

இந்த பப்ஸை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் 29 மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமிருந்த பப்ஸை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.