காவல் நிலையம் அருகேயுள்ள மரத்தில், தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சடலம்.. சேலத்தில் அதிர்ச்சி.!Salem Police Station Near Tree Man Hanged Died Body Recovered

சேலம் பேருந்து நிலையம் அருகே, சேலம் நகரின் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அசோகா மரம் உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் மரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், விரைந்து செயல்பட்டு சடலத்தை கீழே இறக்கினர். இறந்தவரின் கைகளில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனோகரி என்று பச்சை குத்தப்பட்டு இருந்துள்ளது.

Salem

இதனையடுத்து, அடையாளம் தெரியாத நபரின் பிரேதத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், இவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.