ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சி.. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் பகீர் சம்பவம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
சேலம் நகரில் செயல்பட்டு வரும் பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் மிதந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
பின்னர், இது குறித்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், திரையரங்குக்கு விரைந்து வந்தனர்.
அங்கு, குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பூச்சிகள் கலந்த பாலை சோதனை செய்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும், மீதமிருந்த பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து திரையரங்க நிர்வாகத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது.