சிபிசிஐடி அலுவலகத்தின் மிக அருகில் பலான தொழில்; சேலத்தை அதிரவைத்த ஹைடெக் விபச்சாரத்தின் பரபரப்பு பின்னணி.. விபரம் உள்ளே.!

சிபிசிஐடி அலுவலகத்தின் மிக அருகில் பலான தொழில்; சேலத்தை அதிரவைத்த ஹைடெக் விபச்சாரத்தின் பரபரப்பு பின்னணி.. விபரம் உள்ளே.!



Salem CBCID Office Near Prostitution 

 

சேலம் நகரில் உள்ள நெடுஞ்சாலை நகர், கிருஷ்ணா தெருவில் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து 200 அடி தூரத்தில் இருக்கும் வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அதிரடியாக சென்ற காவல் துறையினர் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது உறுதியானது. இதற்கு மூளையாக செயலபட்ட தம்பதி திவ்வியா - பாலமுரளி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின.

அதாவது, கடந்த 4 ஆண்டாக திவ்யா சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக எச்ஐவி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் கணவர் பாலமுரளி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். 

திவ்யா அரசு மருத்துவமனையில் வேலைபார்த்து வந்தபோது, எச்ஐவி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்த கணவரின் மனைவி தங்களுக்கும் எச்ஐவி பாதிப்பு இருக்கிறதா? என சோதனை மற்றும் ஆலோசனை பெற வந்துள்ளனர். திவ்யாவுக்கு பல கடன்கள் இருந்த நிலையில், அதனை சமாளிக்க பெண்களை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என எண்ணியுள்ளார். 

ஆலோசனை பெற வரும் பெண்களின் மனநிலை, வருமானம் உட்பட பிற விபரங்களை தெரிந்துகொள்ளும் திவ்யா, ஏழ்மையான பெண்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து இருக்கிறார். அவரின் வலையில் சிக்கும் பெண்கள் விபச்சார தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர். 

இதற்காக தனது ஆண் நண்பர் தியாகராஜன் உதவியுடன் நெடுஞ்சாலை நகரில் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளது. பெண்களை மூளைச்சலவை செய்து வாடகை வீட்டிற்கு அனுப்ப, வாடிக்கையாளர்களை அழைத்து வர பாலமுரளி, தியாகராஜன் உதவி இருக்கின்றனர். 

வாடிக்கையாளர்களிடம் ரூ.3 ஆயிரம் பணம் பெற்றுக்கொள்ளும் திவ்யா, பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்ட பெண்களிடம் ரூ.500 நபருக்கு என ஊதியமாக கொடுத்துள்ளார். பாலமுரளி தனது அரசு அலுவலகத்தில் தன்சார்பு காரியத்தை சாதிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கும் சில பெண்களை விருந்தளித்து இருக்கிறார்.

இவர்களின் வாக்குமூலத்தை குறித்து வைத்துக்கொண்ட அதிகாரிகள் திவ்யா, பாலமுரளி, தியாகராஜன், சாமுவேல், மோகன் குமார், கௌசல்யா, தேவா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநகராட்சி பணியாளர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.